Saturday, August 22, 2009

அலெக்ஸாண்டெர் நிகோலேவிஷ் ஸொகுரோவ்,



அலெக்ஸாண்டெர் நிகோலேவிஷ் ஸொகுரோவ், ருஷ்ய குடிமகன் ஆவார். பிரபல ருஷ்ய இயக்குநர் ஆண்ட்ரே டார்கோவ்ஸ்கியின் வாரிசாக கருதப் படுபவர். இவர் ஸைபீரியாவில் பிறந்தவர். இவரது தந்தை ஒரு ராணுவ அதிகாரி. நிஸ்நி நோவோக்ராட் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பாடத்தில் பட்டம் பெற்றவர். அதைத் தொடர்ந்து அவருக்கு டார்கோவ்ஸ்கியின் நட்பு ஒரு திரைப்பட ஸ்டூடியோவில் கிடைத்தது. டார்கோவ்ஸ்கியின் மிர்ரர் திரைப்படம் இவருக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. ஸொகுரோவின் ஆரம்ப காலத் திரைப்படங்களில் பல ருஷ்ய அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டன. முதன் முதலில் அவர் உலக அளவில் பேசப்பட்டது, தந்தையும் மகனும் (Father and Son, 1996) என்ற படத்தின் மூலம் தான். இப்படத்தின் கதை முறைகேடான உறவுமுறைகளைப் பற்றியதாகும். பின்னர் அவர் புகழ் பெற்ற 20ம் நூற்றாண்டு ஆட்சியாளர்களான மோலோச், ஹிட்லர் மற்றும் லெனினைப் பற்றிய முப்பரிணாமக் கதைகளைப் படமாக்கினார் மற்றும் 2004ல் மன்னர் ஹிரோஹிடோவைப் பற்றிய திரைப்படமான தி சன் என்ற படத்தைப் படைத்தார். கேன்ன்ஸ் திரைப்பட விழாவில் அவருடைய படங்கள் தொடர்ந்து இடம் பெற்றன. குறிப்பாக அவருடைய நான்கு படங்கள் முதன் முதலில் கேன்ன்ஸ் விழாவில் தான் திரையிடப்பட்டன. செய்திப் படமாகக் கருதப்படும் ருஷ்யன் ஆர்க் என்ற வித்தியாசமான முறையில் படமாக்கப் பட்ட படமே அவரை உலக வரிசையில் முன்னணி இயக்குநராகப் பரிமளிக்கச் செய்தது.

ஸொகுரோவ் இயக்கிய ருஷ்யன் ஆர்க் படத்திலிருந்து ஒரு காட்சி.

நன்றி யூட்யூப் இணையதளம்



அவர் இயக்கியுள்ள திரைப்படங்கள் 47.
அவருடைய எழுத்தில் வெளிவந்த திரைப்படங்கள் 21
அவர் நடித்துள்ள திரைப்படங்கள் 7
அவர் ஒளிப்பதிவு செய்துள்ள திரைப்படங்கள் 4
மற்றும் உருவகம் செய்துள்ள படம் 1
தயாரித்துள்ள திரைப்படங்கள் 1
கலை ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றியுள்ள படம் 1

அவரைப் பற்றிய தகவல்கள் கீழ்க்காணும் இணையதளங்களிலிருந்து திரட்டப்பட்டுள்ளன.
The information on Aleksandr Sokurov has been compiled from the following sites:
http://www.imdb.com/name/nm0812546/
http://en.wikipedia.org/wiki/Alexander_Sokurov

His own Website:
அவருடைய அதிகார பூர்வமான இணையதளம்
http://sokurov.spb.ru/island_en/mnp.html